பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

இவ்விறைவனது அண்மையில் எரிந்துகொண்டிருக்கும். அவ்விளக்கு மட்டும் எந்த நேரமும் அசைந்து கொண்டே எரியும். அவ்விறைவனைச் சூழ உள்ள ஏனைய விளக்குகள் இவ்வாறு அசைவுடன் எரியமாட்டா. இஃது உண்மை. வெறும் புகழ்ச்சி இல்லை. இத&ன உற்றுக் கவனியாதார் இனியேனும் அங்குச் சென்றக்கால் கவனிக்கவும். இறுதி யாகத் திருத்தில்லையாம் சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமான் ஆகாய வடிவமாய் உள்ளான் என்பதைச் சிதம்பர ரகசியம் என்று கூறித் திரையிட்டு முடியுள்ள இடமோ நமக்குத் தெளிவாக்குகின்றது. அவ்விடத்தில் எந்தவிதமான உருவமும் கிடையாது; வெற்றிடமே ஆகும், ஆளுல், தரிசனுர்த்தமாகச் செல்லும் நாம் தெளிவாக அந்த இடத்தைக் காணவே முடியாது.

இங்ங்னம் காணுதவாறு ஆண்டுள தீட்சதர்கள் தீபாராதனையினைத் திரை நீக்கிச் சட்டெனக் காட்டித் திரையினை முடிவிடுகின்றனர். அவ்வாறு திரையிட்டு மூடப் பெறும் இடம் இன்னது என்று அறியவிரும்புபவர், திருவெண்காடு சென்ருல், அங்குள்ள வீரபத்திரப் பெரு மானுக்குப் பக்கத்தில் சிதம்பர ரகசியம் போன்று திரையிட்டு மறைக்கப்பட்ட இடத்தைக் காணல. ம். ஆல்ை அங்ங்னம் மறைக்கப்பட்ட இடம் அவசரம் சிறிதும் இன்றித் திரை நீக்கப் பெற்று அன்டர்கள் நிதானமாகத் தரிசனம் செய்யும் வரையில் தீபாராதனை காட்டப்படு வதை இன்றும் கண்டு களிப்புறலாம்.

தியாகேசப் பெருமான் சிவாலயங்களில் இருப்ப ரேனும், அவர்க்குச் சிறப்பான இடங்களாக ஏழு இடங் களைக் கூறுவர். அவையே சப்தவிடங்கர் ஸ்தலங்கள்