பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 41

எனப்படும். அத்தலங்கள், திருவாரூர், திருநாகை, திரு நள்ளாறு, திருக்காருயில், திருக்கோளிலி, திருவாய்மூர், திருமறைக்காடு என்பன. திருவாரூரில் உள்ள விடங்கர் வீதி விடங்கர் என்னும் திருப்பெயருடன், அசபா நடனம் புரிவர். திருநாகையில் உள்ள விடங்கர் சுந்தர விடங்கர் என்னும் பெயருடன் தரங்க நடனம் இயற்றுவர். திரு' நள்ளாற்றில் இறைவர் நாக விடங்கர் என்ற நற்பெய ருடன் உன்மத்த நடனம் உஞற்றுவர். திருக்காருயில் பதியில் ஆதிவிடங்கர் என்னும் அழகிய பெயருடன் குக்குட நடனம் குது கலமாய் நடிப்பர். திருக் கோளிலி என்னும் திருப்பதியில் அவனி விடங்கர் என்னும் அற்புதத் பெயர் தாங்கிப் பிருங்கி நடனம் புரிவர், திருவாய்மூரில் நீலவிடங்கர் நிலவி, கமல நடனத்தைக் களிப்புடன் நடிப்பர். திருமறைக்காட்டில் புவனவிடங்கராய்ப் பொலிந்து, அம்ஸ் நடனத்தை அணியுடன் ஆற்றுவர்.

ஆகவே, இதுவரையில் கூறிவந்த செய்திகளில் கோயில்களிலும் தனிச் சிறப்புடைய திருக் கோயில்கள் இருக்கின்றன என்பது தெளிவாகிற தன்ருே? இம்முறைப் படியே ஆறுமா முகனுக்கும் ஆலயங்கள் பலவாக அமைந் தாலும், அவனுக்குரிய உகந்த இடங்கள் ஆறு என்பதை யும் ஆன்ருேர்கள் அறிவித்துள்ளனர். இவையே அப் பெருமானது ஆறு படை வீடுகள் என்பன். இவ்வாறு ஆறு படை வீடுகள் உண்டு என்பதை உணர்த்திய பெருமை நக்கீரரைச் சாருமோ என்று யான் யூகிக்கின் றேன். அவரே தம் பழம் பாடலாகிய, அதாவது சங்கப் பாடலாகிய திரு முருகாற்றுப் படையில் பாடி அருளினர். இவரையொட்டியே, கச்சியப்பசிவாசாரியரும், அருண கிரிநாதரும் ஆறு திருப்பதிகளைச் சிறப்பு முறையில் பாடிக் காட்டினர். அவ் வாறு திருப்பதிகள் திருப்பரங்குன்றம்,