பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

திருச்செந்துார், திருவாவினன்குடி, திருவேரகம், குன்று தோருடல், பழ முதர்சி சோலை என்பன. இனி ஒவவொன்றன் சிறப்பையும் அங்கங்கு ஆறு முகன் வீற்றி ருக்கும் வீறினையும் உணர்வோமாக.

திருப்பரங்குன்றம்

இத்தலம் மதுரைக்குத் தென் மேற்கே நாலுகல்தொலை வில் உள்ளது.திருப்பரங்குன்றரயில்வே ஸ்டேஷனிலிருந்து கால்மைல் தூரத்திலும் உள்ளது. இத்தலம் மதுரையின் மேற்கே அமைந்திருத்தலே 'மாடமலி மறுகில் கூடல் குடவயின்' என்று திருமுருகாற்றுப் படையிலும் கூட்ற் குடவயின் பரங்குன்று’ என அகநானுாற்றிலும் குறிக்கப் பட்டிருத்தலினல் தெரியலாம். குடவயின் என்பது மேற்குப் பக்கம். இது திருப்பரங்கிரி என்றும் கூறப்பெறும். இங்குத் தான் நக்கீரர் பூதததால் குகையுள் அடைக்கப்பட்டபோது, அவர் திருமுருகாற்றுப்படை பாடி அக்குகையினின்று திரு முருகன் திருவருளால் விடுதலை பெற்று வெளிவந்தனர். தெய்வானையம்மையை முருகன் திருமணம் புரிந்த தலமும் இதுவே. இது மலையில் குடைந்து எடுக்கப்பட்டகோயில். இத்தலத்திற்கு நிசம்ப அழகியர் என்னும்பெயரியபுலவரால் பாடப்பட்ட தல புராணமும் உண்டு. இங்குள்ள தீர்;க்தம் சரவணப் பெய்கை என்பது. மலைமீதும் ஒரு தீர்த்தம் உண்டு. அது காசிதீர்த்தம் எனப்படும். இம்மலை மீதுள்ள தீர்த்தத்தில் பலவண்ண மீன்கள் நடமாடுவதை இன்றும் காணலாம். மலைமீது முஸ்லிம்கள் தங்கள் மதக்கொடி யினே நாட்டி, இத்தலம் தங்களுக்கும் உரிமையுடையதாகக் கூறிக் கொள்கின்றனர். இந்த மலையை வலமாக வந்தும் வழி படலாம்.

திருப்பரங்குன்றம் முருகப் பெருமானுக்குரிய ஆறு படை வீடுகளுள் முதன்மை வாய்ந்த தலமாக இருப்பதோ