பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 45;

இந்திரன் பூசையாயினன் அகலி கைஇவள் சென்ற கெளதமன் சினனுறுக் கல்லுரு ஒன்றிய படியிதன் றுரைசெய்வோரும் இன்ன பலபல எழுத்து நிலைமண்டபம்

எனப்பரிபாடல் பாடுகிறது.

திருப்பரங்குன்றம் உயரமானதும் அடர்ந்துள்ள காடுகளைக் கொண்டதும் என்றும் சோலைகளை யுடையது என்றும் தேவர்கள் வந்து பணியும் தலம் என்றும் சூரிய சந்திரர் வந்து தங்கும் மலே என்றும் அருணகிரி யார் அன்புடன் பாடுகின்ருர்,

மதியும்கதி ருந்தட வும்படி

உயர்கின்ற வனங்கள் பொருந்திய வளமொன்று பரங்கிரி வந்தருள் பெருமாளே மதியும்கதி ரும்புய லும்தின

மறுகும்படி அண்டம் இலங்கிட வளர்கின்ற பாங்கிரி வந்தருள் பெருமாளே தெனத்தெ னந்தன எனவரி அளிநரை

தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில் திகழ் திருப்ப ரங்கிரி தனிலுரை சரவணப் பெருமாளே செழித்த தண்டலை தொருமில் கியகுட

வளைக்கு லந்தரு தரளமு மிகுமுயர் திருப்பரங்கிரி வளநகர் மருவிய பெருமாளே சீதள முந்தும னந்தயங் கும்பொழிலை

சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ் சும்பதி தேர்ப ணிந்தெழு தென்பரங் குன்றுறை பெருமாளே திங்களும் செங்கதிரும் மங்குழுலும் தங்குயர்

தென்பரங் குன்றிலுறை பெருமாளே

என்ற பாடல்களைக் காணவும்,