பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள்

புனல் அ8லவாய்எனத் தொல் காப்பிய மேற்கோள்பாடல் பாடுகிறது. திருமணி, விளக்கின் அலைவாய் என அக நானூறும் வெண்திரைப் புணரி அலைக்கும் செந்தில் நெடு வேள் நிலை இய காமர் வியன்துறை எனப் புறநானூறும் போற்றுகின்றன. சீர் கெழு செந்தில் எனச் சிறப்பிக் கிறது சிலப்பதிகாரம்.

தாவரங்கள் மிகுதியும் பெற்ற இடம் திருச்செந்தூர் ஆகும். இதனை,

வளரும் வாழையும் மஞ்சளும் இஞ்சியும் இடைவி டாதுநெ ருங்கிய மங்கல மகிமை மாநகர் செந்தில் வந்துறை பெருமாளே என்ற அருணகிரியார் வாக்கே தெளிவு படுத்தும்.

இப்பதிக்கு மதிற்பெருமையும் உண்டு. அம் மதிலின் உயர்ச்சியினை உயர்வு நவிற்சி அணியில் அருணகிரியார் குறிப்பிடும் போது, சூரியனது குதிரைகள் இடறும் வகை யில் உயர்ந்துளது என்று பாடுகிரு.ர்.

தினகர திண்டேர்ச் சண்டப் பரியிட றும்கோட் டிஞ்சித் திருவளர் செந்தூர்க் கந்தப் பெருமாளே என்ற பாடலைக் காண்க. மற்றும் ஒர் இடத்தில் பவளத்துங்கப் புரிசைச் செந்தில்' என்றும் பாடுகிருர்.

இப்பதியில் நீர் வளம் நிலவளம் அலைவளம் இன்ன என்பனவற்றை அருணகிரியார் பலபடப் புனைந்துள்ளார்.

தீரளும்ணி தரளமுயர் தெங்கில் தங்கிப் புரள எறி திரைமதா சங்கத்துங்கத் திமிரசல நிதிதழுவு செந்தில் கந்தப் பெருமாளே என்றும்,