பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 5f

முருகனே ஆயினும், பழநிமலைமீது போகரது சமாதி. இருத்தலே இன்றும் நாம் கண்கூடாகக்காணும் நிலையில் இருப்பதால், அப்போக முனிவர் சிறந்த சித்தர் ஆதலின், அவர் வாழும் இடம் என்ற பொருளில் இத்தலம் சித்தன் வாழ்வு என்ற திருப்பெயரைப் பெற்றது என்று கூறினும் அமையும்.

ஆவியர் குடியினர் இந்த ஊரில் வசித்ததாக கூறப் படுகிறது. இக்குடிக்குத் தலைவனாய் இருந்து இதனை ஆண்ட சிற்றரசன் பேகன் என்பவன். இவன் வையாவிக் கோப் பெரும் பேகன் என்று குறிப்பிடப் பட்டதிலிருந்து இவன் ஆவியர் குடிக்குத் தலைவன் என்பது உண்மை யாகிறது. இவன் மயிலுக்குத் தான் போர்த்திருந்த விலை யுயர்ந்த போர்வையினை ஈந்த மாண்பைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

இந்த ஆவினன் குடித்தலம் பழநி மலைக்குப் போகும் வழி யிலேயே உள்ளது. இதுவே, ஆறுமுகனது ஆறுபடை வீடுகளில் ஒன்ருகவிளங்கும் பெருமைக்கு உரியது. இதுவும் பழனியும்ஒன்றேதான் என்று ஏற்றுக் கொள்ளுதற்கு இடம் இல்லை. நக்கீரர் திருவாவினன் குடி என்றுதான் குறிப் பிடு கின்றனரே அன்றிப் பழநி என்பதைப் பற்றிய குறிப்பே கூறிற்றிலர். கச்சியப்ப சிவாசாரியர் ஆறு திருப்பதிகளைக் குறிப்பிட்டுவணங்கிய இடத்தும், "திருவாவினன்குடி வரும் அமலன் போற்றுவாம்’ என்று போற்றினரே அன்றிப் பழநி மாமலையை இணைத்தோ குறித்தோ பேசிற்றிலர். அருணகிரியாரும் தமது திருப்புகழில் திருவாவினன் குடியை வேருகவும் பழநி மலையினை வேருகவும் பாடிக் காட்டி யுள்ளார். திருவாவினன் குடி பழநி என்னும் ஊரில் உள்ள தலம் என்ற குறிப்பும்,

அமரர்க்கிறை யுேவணங்கிய பழநித்திரு வாவினன்குடி

அதனில்குடி யாயி ருந்தருள் பெருமாளே -

என்ற அடிகளில் பெறப்படுகின்றது.