பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் பெருமை 5

முழுமுதற் பரம்பொருளாம் பரசிவத்தின் திருவாயின் மூலமாகவும் அறிந்து நாம் இவ் உண்மையினை உணர்ந்து கொள்ளலாம்.

ஆதலின் நமது சத்தி அறுமுகன் அவனும் யாமும் பேதகம் அன்ருல் நம்போல் பிரிவிலன் யாண்டும்

நின் ருள் ஏதமில் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும் போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்

எனச் சிவபெருமானே மொழியும் மொழிகளால் தெளியலாம்.

ஈண்டே இறைவன் ஆறு திருமுகங்களுடன் திகழ் வதன் உட்பொருளை உணர்ந்து மேலே செல்வோமாக. முருகப்பெருமான் ஆறு திருமுகம் கொண்டமைக்குரிய காரணங்களை அனுபவம் மிகுந்த அறிஞர்கள் அறிவித்தே சென்றுள்ளனர். நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையுள்,

மாஇருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரம்கொடுத் தன்றே! ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்விஓர்க் கும்மே; ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக் கும்மே; ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே; ஒறுமுகம் குறவர் மடமகள் கொடிபோல் துசுப்பின் மடவரல் வள்ளியொடு நகைஅமர்ந் தன்றே

என்றனர்.

இதன் பொருள், 'இருள்மிகுந்த உலகம்ஒளியுடன் திக ழவும், அன்பர்கள் தம்மைத் துதித்து வணங்க, அவர்கள்