பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறு திருப்பதிகள் 59

சுபானமுறு ஞானந்தபோதனர்கள்சேரும் சுவாமிமலை என்பதல்ை தவசிகள் வந்து வணங்குவதையும், திருமால் முதலியவர்கள் வணங்கும் தலம் என்பதைச் சுராதிபதி மால் அயனும் மாலொடு சலாம் இடு சுவாமி என்றும் கேசவன் பரவு குருமலை என்றும் பாடப்ப்ட்டதலுைம், அருணகிரியார் பாத தரிசனம் பெற்றதைக் கையா எனக்கு உன் அடிகாண வைத்த தனி ஏரகத்தின் முரு கோனே என்பதலுைம் அறியலாம். நிலவளம், நீர்வளம், குடிவளம் முதலானவற்றை,

சூளிகையு யர்ந்த கோபுர

மாளிகைபொன் இஞ்சி சூழ்தரு சுவாமிமலைநின்று லாவிய பெருமாளே என்றும், சூதமிகவளர் சோ லே மருவு சுவாமிம8ல என்றும் மருவு ஞாழல் அணி செருந்தி அடவி சூத வன நெருங்கி வளர் சுவாமிமலை என்றும்,

ஏரண திர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று

தான்நி றைக்க வந்த தொரு சாலி யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சும்

ஏர கத்த மர்ந்த பெருமாளே என்றும் பாடிய பாடல்களால் தெரியலாம்.

இவ்வளவு பெருமைக்குரிய சுவாமிமலை திருமுருகாற் றுப்படையில் குறிப்பிட்டுப் பேசப்படவில்லை. ஏரகம் என்றே குறிப்பிட்டுச் செல்கிறது. சிலப்பதிகாரத்தும் ஏரகம்தான் குறிப்பிடப்படுகிறது. 'சீர் கெழு செந்தியும் செங்கோடும், வெண்குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்' என்பது சிலப் பதிகாரம். இவ்வாறு சங்க நூற்களில் கூறப்படும் ஏரகம் அருணகிரியார்கருதும்சுவாமிமலை அன்று.திருமுருகாற்றுப் படையில் வரும் ஏரகத்தைப் பற்றிக் குறிப்பு எழுத வந்த