பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6% கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

நச்சிளுர்க்கினியர், ஏரகம்-மலே நாட்டகத் தொரு திருப்பதி என்று எழுதிப் போந்தனர். ம8லநாடு ஈண்டுச் சேர நாடாகும். சோழ நாடன்று. சிலப்பதிகாரத்திற்குரிய அரும்பத உரையில் வெண்குன்று என்பதற்குச் சுவாமி மலே என்று பொருள் விளக்கினர். இதல்ை ஏரகம் என் பது தனிப்பதி என்பது புலணுகிறது. சிலப்பதிகாரத்தில் கூறப்பட்ட முருகன் தலங்கட்குப்பின் எண் உம்மை கொடுத்துப் பேசப்பட்டிருத்த்லேக் காண்க. குன்றுதோருடல்

குன்று தோருடல் என்பது இதுவரை மேலே சுட்டிக் காட்டிய தலங்களைப் போன்று ஒரு தனித்தலம் அன்று, முருகன் மலைகிழவோன் என்ற பெயருடையன் ஆதலாலும் குறிஞ்சிக் கிழவன் ஆதலாலும் அவன் குன்று தோருடும் குமரன் ஆயினன். முருகன் ம8லக்கு உரியன் ஆத8ல "சேயோன் மேய மை வரை உலகம்' என்ற தொல்காப்பிய அடியாலும் தெளியலாம். மலைக்குத் தெய்வம் இவனே ஆவான். அருணகிரியாரும் இந்த உண்மையினை உணர்ந்து பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே என்றும், பலமலேயுடைய பெருமாளே என்றும், குன்று தோருடல் மேவு பெருமாளே என்றும் பாடியருளினர்.

பொது முறையில் பாடிய அவர் சிறப்புமுறையில் பல குன்றுகளின் பெயர்களைத் தனித்தனி அமைத்து, அவற்றி லும் முருகன் எழுந்தருளி அன்பர்கட்கு அருள் புரிவதைப் பாடியருளினர். திருமுருகாற்றுப் படையில் குறிப்பிட்ட அடியாகிய குன்று தோருடலும் நின்றதன் பண்பே' என்ற அடிக்குப் பொருள் கூற வந்த நச்சிஞர்க் கினியர், "மலைகள் தோறும் சென்று விளையாடுதலும் தனக்கு நிலை நிறை குணம்’ என்று விளக்கினர்.

முருகனுக்குரிய மலைகளுள் திருப்பதிமலையினையும் குறிப்பிட்டுள்ளார். திருப்பதிமலையே திருவேங்கடமலை