பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

வின் வலப்பக்கச் சிலை ஒன்றிற்கு விபூதி குவிக்கும் செயல் இன்றும் நடைபெறுதலேக் காணலாம்.

இவ்விடம் பழம் உதிர் சோலை என்பதற்கு ஏற்ப செல் லாறு தோறும் இருமருங்கினும் அடர்ந்த சோ லேகள் இருப்பதை அறியலாம். இத்தலத்தை அடையப் பேருந்தி (பஸ்) வசதி உண்டு. கோவில் பெரியதாக உள்ளது.

பழமுதிர் சோலையைப் பற்றி அருண்கிரியார் பல படப்புகழ்ந்து பாடியுள்ளார்.

திரு மலிவான பழ முதிர் சோலை என்றும்,

சோதியின் மிகுந்த செம் பொன் மாளிகை விளங்கு சோலைமலை வந்து கந்த பெருமாளே என்றும்,

அழகான பொன் மேடையு யர்த்திடு கின்ற

முகில் தாவிய சோலைவி யப்புறு அலையாமலை மேவிய பத்தர்கள் பெருமாளே என்றும்,

ஆரத் தோடகி லுற்றத ருக்குல்

மேகத் தோடொரு மித்துநெ ருக்கிய ஆதிச் சோலைம லைப்பதி யில் திகழ் பெருமாளே என்றும் பாடியருளினர்.

பழமுதிர்சோ லே மலேகளுள் சிறந்தது என்ற குறிப்பை விளக்க அருணகிரியார் இதனைக் குலகிரி என்றும் குறிப்பிட்டுப் பாடி அருளினர். (குலகிரி - சிறந்த ம8ல.)

குலகிரி யில்புக் குற்றுறை உக்ரப் பெருமாளே கொடிமினல் அடைந்து சோதி மழகதிர் தவழ்ந்தஞான குலகிரி மகிழ்ந்து மேவு பெருமாளே என்ற அடிகளைக் காண்க.