பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகன் அடியவர்கள் ?al

என்னும் வெண்பாவால் தெரியவருகிறது. ஆனல், இப்போது கிடைத்துள்ள பாடல்கள் இருபத்தி நான்கு ஆகும். அவற்றுள் திருமாலுக்குரியவை ஏழு, முருகனுக் குரியவை எட்டு, வையைக்குரியவை ஒன்பது. ஆளுல், வெண்பாவடிவில் ஐந்து பாடல்களும் அகவல் வடிவில் முப்பது பாடலும் மதுரையைப்பற்றி உள்ளன.

பரிபாடல் இசைப்பா என்ற பெயரைப் பெற்றதற்கு ஏற்ப, ஒவ்வொரு பாட்டின் ஈற்றிலும் பண் குறிப்பிடப்பட் டுள்ளது. இதருல் இப்பாடல் தேவாரம் போலப் பண் ணுடன் பாடப்பட் டிருக்கவேண்டும் என்பது தெரிகிறது. இந்நூலில் வரும் பண்கள் பாலேயாழ், நோ திறம், காந் தாரம் என்பன. இவ்வாறு இசை வகுத்த பெரியார்கள் யாவர் என்பதையும் இந்நூலால் அறியலாம். நன்னகளுர், பெட்டகனர், கண்ணனகளுர், மருத்துவனல்லச்சுதளுர், பித்தாமத்தார், நாகனர், நல்லச்சு தர்ை என்பவர்கள் இசை வகுத்தவர்கள்.

இனி எம்முறையில் சங்ககாலத்து முருகன் அடி யவர்கள் ஆறுமுகப் பெருமானை அன்புடன் வழுத்தினர் என்பதைக் கவனிப்போம்.

ஆசிரியர் கல்லந்துவனர்

ஆசிரியர் நல்லந்துவனர் பாடிய பாடல்கள் நான்கு பரிபாடலுள் உள்ளன. அவற்றுள் மூன்று வைகை நதிக்கும், ஒன்று முருகப் பெருமானுக்கும் உரியனவாக உள்ளன. அவ்வாறு பாடப்பட்ட பாடல் திருப்பரங்குன் றத்து முருகன் மீது பாடப்பட்டதாகும். திருப்பரங் குன் றம் இமயமலை போனறது என்பது ஆசிரியர் கருத்து. 'பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்” என்பர். இவ்வாறு திருப்பரங்குன்றம் இமயக்குன்று என்று கூறுதற்குக் காரணமும் காட்டுகின்ருர்.