பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுகன் அடியவர்கள் 'g

என்று அருணகிரியார் பாடுவர். இவ்வாறு பணிதலை அவர் பல இடத்துக் குறிப்பிட்டுள்ளார். முருகன் வள்ளி யையும் கும்பிட்டு வணங்குவர்.

எயினர்மட மானுக்கு மடல்எழுதி மோகித்து இதன் அருகு சேவிக்கும் முருகா விசாகனே என்று அருணகிரியார் பாடுதல் காண்க.

மகனறிவு தந்தை அறிவு என்பது நம் நாட்டுப் பழமொழி. சிவபெருமானும் உமையம்மையினை வணங்கி யுள்ளார். இதனைக் கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாச சுவாமிகள்,

ஆதிபகவன் தனதுாடல் தணிப்பான்பணிய அவ்விறைவன் பாதம் இறைஞ்சும் அதற்கும் நெற்றிப் பகையும் அல்குல்

பகையும்ாம் சிதமதியும் அரவும்விழும் செயற்கும் உவகை செயாமல்அலை மாது பணியும் அதற்குமனம் மகிழும் உமையை

வணங்குவாம் என்றனர். இவ்வாறு கணவன்மார் மனைவியர் காலில் பணி தல் ஊடலில் நிகழும் நிகழ்ச்சி என்பதைத் தொல்காப் பியமும்,

மனைவி உயர்வும் கிழவோன் பணிவும் நினையும் காலை புலவியுள் உரிய என்று கூறுகிறது.

கேசவனர்

இவர் முருகன்மீது பாடியபாட்டு ஒன்றே பரிபாடலில் உளது.இவரது பெயரைப்பார்க்கும்போது இவரது முன்னேர் களும்.இவரும் பரம்பரைவைணவராக இருந்திருக்கவேண்டும் என்பது தெரிகிறது. இவரது பெயர் கேசவனர் என்றிருக் கிறது. கேசவன் என்னும் திருநாமம் திருமாலுக்கே