பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

உரியது. இந்த வைஷ்ணவப் பெயரை இவரது பெற்ருேர் கள் இவருக்குச் சூட்டி இருக்கின்றனர். இப்படி இருந்தும் இவர் முருகப் பெருமானிடத்தில் முதிர்ந்த அன்பு கொண்டு அவனைப் பாடிப் பரவியுள்ளார். இவ்வாறு வைஷ்ணவ சம யத்தைச் சார்ந்தவர்கள் சைவ சமயக் கடவுளைக் கனிந்து பாடிய நூல்கள் தமிழில் உண்டு. சைவத் திருமுறைகளில் ஒன்ருன ஒன்பதாம் திருமுறையில் காணப்பெறும் திருவாலி அமுத்ளுர், புருடோத்தம நம்பி ஆகிய இருவர்களும் வைஷ் ணவ மரபினர் என்பது அவர்கள் திருப் பெயரால் விளங்கு கின்றது. கேசவர் புருடோத்தமர் என்று நாலாயிரப்பிர பந்தத்தில் திருமாலைக் குறித்துப் பாடப்பட்டிருத்த8லக் காணவும். பகழிக் கூத்தர் என்பவர் ஒரு புலவர். இவரும் வைஷ்ணவரே. இவர் திருச்செந்துர் முருகப் பெருமான்மீது பிள்ளைத் தமிழ் பாடித் தம் வயிற்று வலியைப் போக்கிக் கொண்டவர். கேசவனர் பாட்டில் அரிய குறிப்பு ஒன்று காணப்படுகிறது. அதாவது முருகன் நறும்புகையினை நனி விரும்புபவன் என்பது. இதனே, "நறையின் நறும்புகை நனியமர்ந் தோயே" என்று முருகனை விளித்திருப்பதால் அறியலாம். இதல்ை கற்பூர ஆலத்தி முன்னர் இல்லை என் பதை ஈண்டு அறிதல் வேண்டும். சலம் தூபமொடு தீபம் மறந்தறியேன்” என்று அப்பர் தூபத்தைக் குறிப்பிட்டிருப் பதை ஈண்டே நினைவு கூர்தல் வேண்டும். முருகன் பாட்டில் பெருவிருப்பினணுய் இருத்தலையும் இவர் குறிப்பிடுகிருர்.

கெழீஇக் கேளிர் சுற்றம் நின்னை எழி இப் பாடும்பாட்டமர்ந்தோயே

என்னும் அடிகளைக் காணவும். இறைவரும் சொற்றமிழ் பாடுக என்று சுந்தரருக்குக் கட்டளையிட்டதையும் கூர்ந்து நோக்குக. பாட்டில் பரமர்க்கு விருப்பம் ஆத8லத் தாயுமா னவரும் 'பன்மாலேத் திரள் இருக்கத் தன்மயுணர்ந்தோர்