பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

வழுதி, மடமயிலோரும் மனையவ ரோடும் கடனறி காரியக் கண்ணய ரோடும்நின் குருறை குன்றில் தடவரை யேறி என்ற அடிகளில் காண்க.

திருப்பரங்குன்றத்தில் பலவித இசைக்கருவிகளை இசைத்து வழிபட்ட வகையினையும் இவர் அறிவிக் கின்றனர்.

தெய்வப் பிரமம் செய்கு வோரும் கைவைத் திமிர்புகுழல் காண்கு வோரும் யாழின் இனிகுரல் சமங்கொள் வோரும் வேள்வியின் அழகியல் விளம்பு வோரும் கூர நாண்குரல் கொம்மென ஒலிப்ப ஊழுற முரசின் ஒலிசெய் வோரும் என இசையை முழக்கி வழிபட்டோரைக் காட்டினர். இவ் வாறு இசைக் கருவிகளை எழுப்பியும், மற்றும் பலவாரும் அன்பர்கள் வழிபடுவதை மணி மொழியாரும்

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் என்று திருப்பள்ளி எழுச்சியில் பாடியுள்ளார்.

கடம்பமா அணிநிலை பகர்ந்தே முடங்கமர் ஆயமொ டேத்தினம் தொழுதேஎன்று நப்பண்ணனர் பாடிமுடிக்கின்ருர், முருக&னத் தாம் மட்டும் வாழ்த் தி வணங்கி நல்லருள் பெற விரும்பாது ஆய மொடு ஏத்தினம் என்று பரவி இருப்பதிலிருந்து அவரது பரந்த மனப்பான்மையினை நன்கு அறிந்து கொள்ளலாம்.

கல்லச்சுதனர் :

இவர் பரிபாடலில் பாடியுள்ள முருகன் பாட்டு ஒன்று உள்ளது. இவர் இப்பரிபாடல்களின் பாடல்