பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

திருப்பரங்குன்றத்தில் நறும்புகையினை மிகுதியும் எழுப்பி வழி படுதலால் அப்புகை மேலே எழும்பி இமை யாத நாட்டத்தினையுடைய தேவர்களின் கண்களை இமைக் கச்செய்தது என்றும் சூரியன் மண்டலம் நறும்புகையால் மறைப்புண்டது என்றும் கூறும் முகத்தால் அங்குத் துப வழிபாட்டினரின் மிகுதியினை அழகுறக் காட்டினர் நல்லழுசியார்.

திசைநாறிய குன்றமர்ந் தாண்டாண்டு

ஆவி உண்ணும் அகில்கெழு கமழ்புகை

வாய்வாய் மீபோய் உம்பர் இமைபிறப்ப

தேயா மண்டிலம் காணுமா றின்று

என்ற அடிகளைக் காணவும். இவ்வாறெல்லாம் திருமுரு கனச் சங்க காலத்து அடியார்கள் தம் புலமை தோன்ற வாழ்த்தியும் வணங்கியுள்ளனர். அவர்களையும் நாம் நினைவு கொள்ள வேண்டும் என்பதற்காகவே, ஆறு முகனின் அடியார்கள் என்னும் பொருள் பற்றி இது வரை யில் பேசி,

இடுதலைச் சற்றும் கருதேனைப் போதமி லேனையன்பால்

கெடுதலி லார்தொண் டரில் கூட் டியவா கிரெளஞ்சு

வெற்பை

அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி அறவிச்சிறை விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே.

என்று துதித்துக் கொண்டு முடிக்கின்றனன்.