பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

வெள்ளிக் கிழமையில் கந்தப் பெருமானைக் கருத்தில் உன்னி அந்நாளில் விரதம் இருந்தால், இன்னபலன் கிடைக்கும் என்பதை வசிட்டர் முசுகுந்தனுக்கு அறிவித்த தன் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

எள்ளரும் சிறப்பின் மிக்க எழுவகை வாரம் தன்னுள் வெள்ளிநாள் விரதம் தானே விண்ணவர் உலகம் காத்த வள்ளல்தன் விரதம் ஆகும் மற்றது புரிந்த மேலோர் உள்ளமேல் நினைந்த எல்லாம் ஒல்லையில் முடியும் அன்றே என்று கூறினர். இவ்விரத்தை மேற் கொள்பவர் மேலோர் என்று ஈண்டுக் குறிப்பிட்டதையும் உன்னுதல் வேண்டும். இவ்வாறு இந்த விரதத்தை மேற் கொண்டு பகீரதன் தன் (கையை வென்ருன் என்பது தெரிகிறது. இதனை மேற் கொள்ளுமாறு பணித்தவர் சுக்கிர 1 சாரியார்.

கோரன் என்னும் அசுரன் பகீரதனது நாடு நகரங்களே வென்று கைப்பற்றின்ை. அதல்ை பகிரதன் தன் மனைவி மக்களுடன் காட்டில் வாழ நேர்ந்தது, இதனை

பகீரதன் என்னும் வேந்தன் படைத்தபேர் உலகை

எல்லாம் நிகரறு கோசன் என்னும் நிருதன் அங் கொருவன்வெளவ மகவொடு மனையும் தானும் வனத்திடை வல்ல எகிப் புரவன் தனது முன்போய்த் தன்குறை புகன்று நின்ஞன் என்ற பாடலால் தெரியலாம். அந்தத் தருணமே

பார்க்கவன் என்னும் ஆசான் பகீரதன் உரைத்தல்

கேளா வேற்கரன் மகிழும் ஆற்ருல் வெள்ளிநாள் விரதம் தன்னை நோற்குதி மூன்றி யாண்டு நுங்களுக் கல்லல் செய்த மூர்க்கனும் முடிவன் நீயே முழுதுல காள்வை என்ருன். இக்கட்டளையை மேற் கொண்டு பதீரதன் விரதத்தை அநுட்டித்துத் தன் பகையை வென்று அரசைப்டபெற்ருன்.