பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷ்டி விரதம் 91

திருமுருகாற்றுப் படையிலும் கந்தப் பெருமான் விரதத்தை மேற் கொண்டவர் இருக்கும் நிலையி&னப் பேசு கையில்.

சீரை தைஇய உடுக்கையர் மாசற இமைக்கும் உருவினர் ஊன்கெடு மார்பினர் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் என்று இவ்வாறு பேசினர்

புரீ ஆண்டாள் அம்மையாரும் பாவை நோன்மைப் நோற்கையில் எப்படி நோற்றனர் என்பதைக் குறிப்பிடு கையில்.

நெய்யுண்ளுேம் பால் உண்ளுேம் நாட்காலே நீராடி மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம் செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்ருேதோம் ஐயமும் பிச்சையும்

ஆந்தனையும் கைகாட்டி

என்று விதந்து ஓதி விரதம் முடிந்த பிறகு, பால் சோறு, மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக் கூடி இருந்து, உண்ட நிலையினைப் பேசினர்.

ஆகவே மேலே, குறிப்பிட்ட முறையில் எவராயினும் விரதங்களை மேற் கொண்டு முறைப்படி நடந்தால் பெரும் பய8னப் பெறுவர் என்பதைக் கச்சியப்ப சிவாசாரியார்,

ஆகையால் அயன் அறியா அருமறைமு லந்தெரிந்த ஏகநாயகன்விரதம் எவரேனும் போற்றியிடில் ஒகையால் நினைந்தளலாம் ஒல்லைதனில் பெற்றிடுவர் மாகமேல் இமையவரும் வந்தவரை வணங்குவரே