பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சஷ்டி விரதம் 38

அதாவது, கூப்பிடும்போது நீ வரவேண்டும் என்ற கட் ட8ள பிறப்பித்தான் என்பது. பிரம தேவனை நோக்கி,

செங்கம லத்தின் மேவும் திசைமுகத் தொருவன் தன்னைத் துங்கமோ ரசுசெய்யும் சூாளும் வீரன் பாரா இங்குநின் மைந்தரோடும் என்னிடம் தன்னில் ஏகி அங்கமை வமையும் நாளும் அறைந்தனை போதி என்ருன்

அதாவது, தினமும் நாள் நட்சத்திரம் அறிவித் துப் பஞ் சாங்கம் ஒதிச் செல்க என்று பணித்தவாறு. சூரியனை நோக்கி,

அறத்தினை விடுத்த தீயோன் அருக்கனை நோக்கி நம்மூர்ப் புறத்தினில் அரணம் மீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல் நிறுத்திய சிகரி யூடு நெறிக்கொடு புக்கு வான்போய் எறித்தனை திரிதி நாளும் இளங்கதிர் நடாத்தி என்ருன் அதாவது எம் முர்க்கோட்டை மீது செல்லாது மலைப்பக்க மாகச் சென்று இளங்கதிர் வீசிச் செல்க என்று திட்டம் இட்டுக் கூறினன் என்பதாம். சந்திரனே நோக்கி,

அறைகழல் சூர பன்மன் அவிர்மதி தன்னை நோக்கிப் பிறையென வளரு மாறும் பின்முறை சுருங்கு மாறும் மறைவொடு திரியும் ஆறும் மற்றினி விடுத்து நாளும் நிறைவொடு கதிரோன் போல் இந் நீள்நகர் வருதி

எனருன அதாவது எந்தநாளும் கலையில் குறையாது பதினறு கலைகளுடன் பூரண சந்திரனுகத்தினமும் பொலிய வேண்டும் என்பதாம். அக்கினிப் பகவானைப் பார்த்து,

பொங்கழல் முதல்வன் தன்னைப் புரவலன் விரைவில்

நோக்கி இங்குநம் மூதூர் உள்ளோர் யாவரே எனினும் முன்னின் அங்கவர் தம்பால் எய்தி அவர்பணி யாவும் ஆற்றிச் செங்கம லம்போல் யாவர் தீண்டினும் குளிர்தி என்ருன்