பக்கம்:கந்த சஷ்டி சொற்பொழிவுகள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94. கந்த சஷ்டி சொற்பொழிவுகள்

அதாவது, தன் நகரில் யாராகிலும் நினைத்தால் அவர்க்கு ஆவன செய்து, எவர் தீண்டினலும் அவர்களைச் சுடாது குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்று பணித்த வாரும். இயமதர்மனே ஏறிட்டு நோக்கி,

சுடர்முடிஅவுனர்செம்மல் தொல்பெருங் கூற்றை நோக்கி படுமுழு துயிரை நாளும் படுப்பது போல நந்தம் கடமத கரியை மாவைக் கணிப்பிலா அவுனர் தம்மை அடுவது கனவும் உன்னு தஞ்சியே திரிதி என்ருன் அதாவது, உலகில் தினமும் உயிர்களைக் கொல்வது போலத் தென்னுட்டு அவுனர்களையும், யானை, குதிரைகளையும் கொல்லுதல் கூடாதுஎன எச்சரிக்கை செய்தவாரும். வாயு பகவா?ன நோக்கி,

அண்டரும் உலவை யானை அவுணர்மாத் தளைவன் பாரா எண்தரும் நம்மு தூரில் யாவரும் புனைந்து நீத்த தண்துளி நறவ மாலை தயங்குபூண் கலிங்கஞ் சாந்த நுண்துகள் ஆடு சுண்ணம் மாற்றுதி நொய்தின் என்ருன் அதாவது நகரில் தும்புதூசுகள் இல்லாமல் இருக்கச் செய்ய வேண்டும் என்று கூறியவாரும். வருணனை நோக்கி,

காவலன் வருவான் தன்னைக் கண்ணுறிஇ நம்மு தூரில் நாவிவெண் பளிதம் சாந்தம் நரந்தமோடளவித் தீம்பால் ஆவியின் வெளிய நொய்ய அரும்பனிநீரில் கூட்டித் தூவுதி இடங்கள் தோறும் காற்றது துடைக்க என்ருன் அதாவது மணமுடைய பொருள்களுடன் பணி நீரைக் கூட்டி நகர் எங்கும் துவுதி என்பதாம். இந்திரனை விளித்து,

வாசவன் தன்னை'நோக்கி மால்கெழு திருவின் மேலோன் தேசுறு துறக்கம் வைகும் தேவர்தம் குழுவி ளுேடும் ஆசையம் கிழவரோடும் அருந்தவ ரோடும் போந்து பேசிய பணிகள் ஆற்றித் திரிமதி பிழையேல் என்ருன்