பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/111

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என் ஆசைகளைப்
பாறைமேல் முளைக்கும் புற்களைப் போல்
வேகமாக உலர்ந்து போகவிடாதே

என் நம்பிக்கைகளை
வயல்களில் முளைக்கும் களைகளைப் போல்
கிள்ளி எறிந்து விடாதே

என் கனவுகளையும் கற்பனைகளையும்
ஒன்றுக்கும் உதவாத துண்டுக்
காகிதங்களைப் போல்
கிழித்தெறிந்து விடாதே

 

75

109