பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நான் துறவியாகப் போகிறேன்.

பற்றுகள் அனைத்தையும்
முற்றும் நீக்கிப்
பரம்பொருளிடம் மட்டும்
பற்று வைக்கும் துறவிகளை
நீ கேள்விப்பட்டிருப்பாய்.

நான்
சகல பற்றுகளையும்
வீசியெறிந்து விட்டு
உன் மீது மட்டும்
பற்று வைக்கும்
துறவியாகப் போகிறேன்.

 

30

46