பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


நேற்றுவரை
ஊரார் என்னைக் கவிஞன் என்றார்கள்.

இன்று
‘பித்தன்’ என்கிறார்கள்.

அந்த மேடையில் ஒரு பெரியவர்,
தெய்வத்தை யாராவது பார்த்ததுண்டா
என்று கேட்டார்.
‘இதோ’ என்று
உன் உருவப் படத்தைக் காட்டினேன்.

அதனால்தான் பித்தன் என்கிறார்கள்;

ஊர் கிடக்கட்டும்.
கவிஞன், பித்தன் என்று
எதையாவது சொல்லும்.
நீ மட்டும் என்னை
என் இனிய ‘காதலன்’ என்று சொல்;
போதும்.

 

37

55