பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒருநாள்
உனக்கு அழைப்பு விடுக்கிறேன்.
நீ என் அறை நோக்கி வருகிறாய்.

"கூப்பிட்டீர்களாமே, என்ன?”
என்று கேட்கிறாய்.
நான் விழிக்கிறேன்.

"ஒன்றுமில்லை" என்கிறேன்.
"ஒன்றுமில்லாமல்
என்னை ஏன் கூப்பிட வேண்டும்?"
உன் பார்வை வினாவாகிறது.

நான் என்ன செய்வது?
உன் நினைவைத் தவிர
என் உள்ளத்தில் வேறு 'ஒன்றுமில்லை'
என்று எப்படிச் சொல்வது?

ஓ... இது ஒரு கற்பனைதான்!

 

40

61