பக்கம்:கனவுகள் கற்பனைகள் காகிதங்கள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


“கண்ணில் தூசுவிழுந்து விட்டது.
கொஞ்சம் ஊதி எடுங்கள்” என்கிறாய்;

நல்ல உதவி... நான் மறுப்பேனா?
ஊதிக் கொண்டிருக்கிறேன்.

“நீங்கள் ஊதுகிறீர்களா? உறிஞ்சுகிறீர்களா?
இது உதடு அல்ல; கண் ?”
என்கிறாய்.

நான் சிரித்துக்கொண்டே,
“எனக்கு
இப்படியெல்லாம்
வித்தியாசம் பார்க்கத் தெரியாது”
என்கிறேன்.

“உங்கள் உதட்டில்
தூசு ஒட்டிக் கொண்டிருக்கிறதே”
என்று தொடர்கிறாய்.

அதை விட்டு விடு.
அது என்னுள்ளே போகட்டும்;
உன் கண்ணின் செய்தியைத்
தூதாக இருந்து சொல்லட்டும்”
என்கிறேன்.

இதுவும் ஒரு கற்பனைதான்!

 

52

75