பக்கம்:கனவுப்பாலம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 கனவுப் பாலம்.

வேறு'ன்ங்கே இருப்பர்??? இன்ஸ்பெக்டர் புருவங்களே உயர்த்தி யோசித்து விட்டு இப்பவே அந்த காச்சிப்கார் னுக்கு போன் பண் ணி கேட்டுட லாம்.? நம்பரை ச் சுழற்றினர். அடுத்த முனேயில் கர்ச்சிப் ஹலோ! என்றது.

சரியோ விலாசம் வெச்சிருக்கீங்களா? என்று. கேட்டார் போலீஸ் இன் ஸ்பெக்டர். விலாசம் இல்லை. எப்பவோ ஒரு டெலிபோன் நம்பர் கொடுத்ததாக ஞாபகம். கொஞ்சம் இருங்க, தேடிப் பார்த்துச் சொல்கிறேன்.” தேடி எடுத்து அந்த நம்பரைச் சொன் ன்ை கர்ச்சிப். - கெளதம் எதிர்பார்த்தபடியே அந்தப் பெண் ஒட்டல் காரர்கள் கொடுத்த விலாசத்தில் இல் லே. கர்ச்சிப் ஆசாமி. கொடுத்த நம்பருக்கு விலாசம் கண்டு பிடித்து, அங்கே போய்த் தேடியபோது அந்த இடம் லேசில் சிக்கவில்லை, ஒரு ரெஸ்ட்டாரண்ட்டில் போய் விசாரித்தான். எதிரில் தெரிந்த வாய்க்கால் ஒரமாகவே நடந்து வலது பக்கம் திரும் பச் சொன்னர்கள். திரும்பியபோது சின்னதும் பெரிதுமாய்ச் சில வீடுகள் வரிசையில் நின்றன. ஒரு வீட்டின் முன் பெரிதாய்ச் சாரம் கட்டி போர்த்தி இருந்தார்கள். அதன் பக்கத்தில் சென்ற சந்து வழியில், நீளமாய் நடந்தான். மனித நடமாட்டமே இல்லாத சந்து. தூரத்தில் தச்ச வேலே நடந்து கொண்டிருந்தது. மரத்தில் அணிகள் அடிக்கப்படுகிற சத்தம், ரம்பம் அறுக்கிற ஓசை, சற்று தூரத்தில் சுவர் மீது சாய்ந்து நின்ற ஒருவனிடம் விலாசத்தைக் காட்ட அவன் 'இதோ இந்தப் படிகள் வழியாக ஏறிப் போங்கள்.’’ என்ருன். - அந்தப் படிகளில் ஏறிப் போன போது அது ஒரு மேம் பாலமாக மாறித் தெருவின் அடுத் த பக்கத்தில் கொண்டு விட்டது. ஏராளமான கார்கள் நின்ற இடத்தில் நேவல் மியூசியம் தெரிந்தது. அங்கேதான் அவள் வீடு இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனவுப்பாலம்.pdf/62&oldid=768658" இலிருந்து மீள்விக்கப்பட்டது