பக்கம்:கனிச்சாறு 1.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8 கனிச்சாறு – முதல் தொகுதி


15.

கிளிவாய்வாழ் தமிழே! யாவின் கிளைவாழ்மைக் குயிலின்
(பாட்டில்
ஒளிவாய் நீ! தென்றல் வாயின் ஒலியே! பூ வண்டின் வாயில்
நெளிவாய் நீ! நீலந் தோய்ந்த நீளலைச் சுருளில் பேசி
ஒளிர்வாய் நீ! என்னைக் காணா தொளிவாயுள் ளொளியே
(வாழி!



16.

கீழ்மைகைக் கொண்டோர் போற்றிக் கிழமையு மறவா துள்ளும்
ஏர்மைகொள் புலவ னெம்மை இரங்கியே காணா தாளைத்
தாழ்விலும் உளம்தை யாமல் தனித்தமிழ்ப் பாடல் யாத்து
வாழ்விலா வகையாய்ப் பேணி வருகின்றேன் காணாய் வாழி!



17.

குழவியி னுள்ளத் துள்ளே குவிந்துநீ வாழ்வு பெற்று
மழலையில் வளர்ந்து தாயின் மார்பினிற் புரண்டு பள்ளி
நிழலிலே குந்தி யின்பம் நீட்டியே என்னைக் கண்டு
விழைந்தனை ஆனால் வாழ்வை விளைவிக்க விழையாய் வாழி!



18.

கூத்திசை யியலு மாகக் கோலஞ்செய் தமிழே, ஈண்டு
நீத்திசை யின்றிப் போன நிலையினைப் பாடிப் பல்வா
றேத்திசீர் பரப்பி யென்றன் ஏற்றத்தை நாட்டி உன்னை
நாத்திசை யிரண்டும் வாழ வைப்பன்; நீ வாழ்வா யம்மா!



19.

கெடுதியைச் செய்வார் கண்டால் கீழ்க்குனிந் திடுவேனுன்னை
யடுத்தவர் தீயராயின் அவர்நாண வைப்பேன்; வாழ்வில்
படுத்தவர் தமிழ ராயின் பணிந்துடன் சென்று காப்பேன்;
கடுத்தவள் நீயா யிற்பின் கழறுவ துண்டோ அம்மா?



20.

கேட்டலே இன்பம்; வாயால் கிளத்தலோ இன்பம் இன்பம்.
பாட்டிலே நெஞ்சு தோயப் படித்தலோ வாயுக் கின்பம்.
ஏட்டிலே கண்ணை வைத்தா லெடுப்பதோ ஈட்டிக் குத்து.
வாட்டினாய் உனைவாழ் விக்க வாடுவேன் காணாய் வாழி!



21.

கையடி செய்வார்க் கெல்லாம் களிசெய்வாய்; கூட்டத் தூர்ந்து
பையடி செய்வோர் பையைப் பணத்தினால் நிரப்பு கின்றாய்!
தையலே, உன்னைக் காணத் தலைநிலம் கவியு மென்பேன்.
நைந்துளேன் என்ப தெல்லாம் நாணய விளைவே யாகும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/35&oldid=1419401" இலிருந்து மீள்விக்கப்பட்டது