பக்கம்:கனிச்சாறு 1.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 கனிச்சாறு – முதல் தொகுதி


56.

பூக்கக் காப் புன்னைக் கோட்டின் மாக்குயிற் பேடுதன்னோ
டூக்கக்கூக் குக்கூக் குக்கூ வெனக் குரலெற்றுப் பாடத்
தேக்கக்கோ டொன்றிற் கிள்ளைக் கூட்டந்தீந் தமிழைப் பேச
மாக் ‘கவி’ நாட்டற் கேயான் மயலுற வேண்டுந் தாயே!

(வேறு)

58.

பெண்கட்குக் கல்வி வேண்டும் பேதைக்குந் தமிழைச் சொல்லிக்
கண்கட்கே வொளியுண்டாக்கிக் கவினுள்ள பொருளைக் காட்டிப்
பண்புடை யாராய்ச் செய்து பாரினில் யாவர் தாமும்
விண்ணொலி யெழுப்பி யுன்பேர் வாழ்த்துநா ளென்வாழ்நாளே!

(வேறு)

59.

மேகந் தூங்கும் வான்பொரு நின்று மென்றமிழ் நின்று காண்குதுபோல்
மாகந் தோங்கு செந்நூ லூடாய் மாநிலங் காணும் வகை யாலே
தாகந் தாங்கு மென்னுள வாசை தணியாய் நெஞ்சுள் வாழ்வாளே
பாகம் புனல்பாய் செந்தமிழ் நாட்டுப் பாவரசீ என் நாவரசீ!

(வேறு)

60.

வேட்டல் நெஞ்சின் வாழ்வே! ஒளியே! வேறெம் மொழிக்குந் தாயேவுன்
னோட்டம் எல்லாஞ் செந்தமிழ் நாட்டின் நோதீர்க் கன்றோ எம்போல
ஊட்டங் கொள்ளும் பாவலர் நெஞ்சில் உறைவோளே நாவுரையாளே
வாட்டங் கண்டாய் கதிராய் என்றன் வன்பனி போக்கெந் தமிழ்த்தாயே!

-1953
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/41&oldid=1419416" இலிருந்து மீள்விக்கப்பட்டது