பக்கம்:கனிச்சாறு 1.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  35



19  தமிழில் கற்க முன்வருக!

பழக்குலை கோதும் கிளிக்குழாம் அன்ன
பசுந்தமிழ்த்தீம்
பழக்குலை உண்டிட முன்வரல் வேண்டும்
தமிழ் இளையோர்!
சழக்குளங் கொண்டவர் நாணும் படிக்குடன்
நண்ணியொன்றாய்
முழக்குக அன்னார் செவிப்பறை யில் “தமிழ்
வேண்டு” மென்றே!

-1963


20  தமிழ் உழவு செய்க !

எழுகதமிழ் மங்கையரே! நல்லிளைஞீர் உங்கள்
இளமைதரும் கனவொருபால் இருக்கட்டும்; முன்னே
தொழுகதமிழ் அன்னையினை; துலங்குகநும் ஆற்றல்!
துணிவுறவே ஊரூராய்த் தெருத் தெருவாய்ச் சென்றே
உழுகநறுஞ் சொல்லாலே! ஊன்றுகசெந் தமிழை;
உணர்வுமழை பொழிவிக்க; எண்ணஎரு ஊழ்க்க!
செழுமையுறுந் தமிழ்க்குலத்தை விளைவிக்க! பின்னர்
செந்தமிழ்த்தாய் அரசிருக்க ஏற்றவழி செய்மே!

-1963
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/62&oldid=1512689" இலிருந்து மீள்விக்கப்பட்டது