பக்கம்:கனிச்சாறு 1.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 கனிச்சாறு – முதல் தொகுதி

புறப்பட் டனர்காண்! தமிழனே! பாரடா!
இறப்பத் தூங்கினை! எழடா இனிமேல்!

யாழிசைப் போனுக்கு யாழ்ப் பயிற்சி வேண்டும்!
பாழாய் இசைப்போன் பழிக்கப் படுவான்;
நாட்டியங் கற்பரே நாட்டியம் ஆடலாம்! 65
பாட்டுப் புலவனும் பண்கள் பயிலுவான்!

ஆனால்,

முத்துச் சண்முகம் எனும் முழு மகனின்
முத்துக் கருத்து யாதெனில், தாளெடுத்
தெழுதுவ தெல்லாம் இலக்கியம்! அதனை 70
எழுதுவோர் யாவரும் இலக்கியப் புலவரே!
கல்லார் உளறும் மொழியே உயிர்மொழி!
எல்லா ரும் அதை எழுதிடல் சாலும்!
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இல்லையாம்!
மொழியா சிரியனின் முழுமைக் கருத்திது! 75
மொழிக்கெனப் பயிற்சி தேவையே இன்றால்
மொழியா சிரியனுக் கிங்கென்ன வேலை?

பாண்டியன் பேணிய பண்பார் தமிழைத்
தோண்டிப் புதைத்திட இவனுந் தோன்றினான்!
முப்பழங் கழகத்து முகிழ்த்த தமிழைத் 80
தப்புந் தவறுமாய்த் தாழ்த்துகின் றானே!
ஏடா, தமிழனே! எடுத்தெறி எழுதுகோல்!
நீடார் பழம்புகழ் நினை! வாள் தூக்கு!

அன்றிலும் மானும் அலைந்த சோலையுள்
பன்றியும் கழுதையும் தமிழைக் கலக்குவ! 85
மொழியென் பெயரால் முள்ளங்கிப் பற்றைபோல்
கொழிக்கின் றனரே கொள்ளை ஊதியம்!
அத்தனைப் பணமும் தமிழர் அளித்ததே!
இத்தனை நாட்களும் தமிழரை ஏய்த்தனர்!

அணிதமிழ் கற்க அண்ணா மலைவரும் 90
மணியெனும் அமெரிக்க மாணவ ரிடத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/75&oldid=1419164" இலிருந்து மீள்விக்கப்பட்டது