பக்கம்:கனிச்சாறு 2.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


118

பெரியார் விதைத்தவை நச்சு விதைகள் என்றால்,
பார்ப்பனர் விதைத்தவை என்ன விதைகள்?


முள் மயிர் மூடிய முக்காட்டுத் தலையும்,
கொள்கோல் கமண்டலம் கொண்ட கைகளும்
நீறு மண்டிய நெற்றியும், பார்ப்பனத்
தூரு மண்டிய உள்ளமும் கொண்டு -
கரவுச் சிரிப்பொடு காவி உடையில்
துறவியாய் உலாவரும் பார்ப்பனத் தொழும்பு-
காஞ்சி காம கோடி மடத்தின்
மூஞ்சி ஒன்று – சின்ன பெரியவாள் –

என்னும் பெயருடன், இந்தியா வெங்கும்
மன்னிய சிற்றூர் பேரூர் எல்லாம் 10
கால்நடைச் செலவாய்ப் - ‘பாதயாத் திரை’ யாய் -
நீள்நடை யிட்டே ‘ஆரிய’ ‘நியம’த்தை
நாள் தொறும் பரப்பிடும் நாடகம் அறிவோம்!

அந்த ‘மூஞ்சி’ தான், அண்மையில் - துணிந்து
வெந்ததும் வேகா ததுமாய் ஓர் - கருத்தைத் -
திருவாய் மலர்ந்து - திக்கி யுள்ளது!
பெரியார் அண்ணா ஆகியோர் நம்மிடம்
மூச்சுக் காற்றாய் முழங்கிச் சென்ற
பேச்சுகள் எழுத்துகள் நச்சு விதைகளாம்!
நாட்டில் அந்த நச்சுகள் பரவிக் 20
கேட்டைத் தந்தவாம்! கெடுத்துவிட் டனவாம்!

சின்ன பெரியவாள் சிந்திய முத்து, இது!
பொன்னால் பொறித்த ‘வேதப்’ பொழிவிது!
கேட்டுக் கொண்டுதான் உள்ளோம்! கேட்டதும்
மாட்டிக் கொண்டு மடிந்திட வில்லை!

அல்லது, அத்தகு அன்புரை கூறிய
நல்ல ‘பிறவி’ யின் நாக்கை அறுத்துத்
தங்கத் தட்டால் உறைசெய்து மாட்டிப்
பொங்கு பூசைகள் புகைத்திட வில்லை. 30
ஏன் தான் பிறந்தோம்? எதற்கு வாழ்கிறோம்?
வீணான பிறவிநாம்! விழல்களாய் இருக்கிறோம்!
கருகிப்போய்க் கிடந்த இந் நாட்டிடை வந்தே
உருகி உருகி உயிரைத் தேய்த்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/216&oldid=1437594" இலிருந்து மீள்விக்கப்பட்டது