பக்கம்:கனிச்சாறு 3.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


77  நாங்கள் புலிகள்!

(எடுப்பு)


நாங்கள் புலிகள்
நாட்டைக் காப்போம்! ஓங்கிய தமிழர்
உரிமைகள் மீட்போம்!

(தொடுப்பு)



தூங்குதல் இல்லோம்; துயர்களைப் பாரோம்!
ஏங்குதல் கொள்ளோம்; இன்பம் விரும்போம்! (நாங்கள்)

சூளுரை ஏற்றோம்; சோம்புதல் இல்லோம்!
தோளுரம் கொண்டோம்; துணிவொடு நிற்போம்! (நாங்கள்)

அச்சமும் கொள்ளோம், அயர்வுகள் இல்லோம்!
எச்சமும் இன்றி, எம்கடன் செய்வோம்! (நாங்கள்)

எழுச்சியும் செயலும் எங்கள் கொள்கை!
முழுச்சிதை வுறினும் முனைப்பில் தளரோம்! (நாங்கள்)

இளைஞர்கள் வருவீர்! எம்முடன் சேர்வீர்!
இளைஞர்கள் எழுவீர்; எம்மொடு நடப்பீர்! (நாங்கள்)

தமிழ்மொழி வளர்ப்போம்! தாழ்ச்சிகள் தகர்ப்போம்!
தமிழ்நிலம் அமைப்போம்! தளர்வுற மாட்டோம்! (நாங்கள்)

உலகத் தமிழர் ஒன்றாய் இணைவோம்!
விலகுதல் இன்றி, வெற்றிகள் கொள்வோம்! (நாங்கள்)

-1980
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/113&oldid=1424605" இலிருந்து மீள்விக்கப்பட்டது