பக்கம்:கனிச்சாறு 3.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  109


உள்ளம் நடுங்காத
தமிழினத் தானைத் தலைமகனே!
உன்னை ஓர் இலக்கம்
கொல் படையும் ஊர் ஊராய்,
காடு காடாய்த்
தேடி வருகிறார்களாமே!

அடல் தகையும் ஆற்றலும் சான்ற
படை வேந்தனே!
உன் விளையாட்டுக்கு
முற்றுப் புள்ளி வைக்க,
இந்தியச் சூழ்ச்சிப் படைகள்
கைகளில் கருவி யேந்திக்
கண்களில் சூழ்ச்சி யேந்தி
உலா வருகின்றனவாமே!
நீ எங்கே இருக்கிறாய்!
சொல் மகனே! சொல்!

கூற்றுடன்று மேல்வரினும்
கூடி எதிர்க்கும் ஆற்றலே!
வேல் கொண்டு எறியினும்
அழித்திமைக்கா விழித்த கண்ணனே!
இராசீவுக்கு,

உன் செங்குருதி வேண்டுமாம்!
உன் புடைத்து விம்மிய தோள்களும்
உடல் தசைளும் வேண்டுமாம் !
உடல் புதைபோய், உனை வீழ்த்த
வெறி கொண்டலைகிறது அந்த
வீணப் பிறவி!

எதிரி விரகர்களுக்கு
எரிமலையே! ஏற்றமே!
உன் தோற்றமே
தொள்ளாயிரம் இந்திய வீரர்களை
மலைத்தோடச் செய்யுமென்றால்
உன் நெஞ்சாங்குலையைத் தின்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/138&oldid=1424630" இலிருந்து மீள்விக்கப்பட்டது