பக்கம்:கனிச்சாறு 3.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


103 எனைச் சிறை செய்யினும் செய்க!

இதோ, நான் ஒருவன்
இங்கிருக் கின்றேன்!
எனைச் சிறை செய்யினும் செய்க!
ஈழத் தமிழரை
ஆதரிக் கின்றேன்!
என் தலை கொய்யினும் கொய்க!

அதோ,என் தமிழரைச்
சிங்களர் கொல்வார்!
ஆடும் என் சதை, நரம்பு எல்லாம்!
அடடா! உலகம்
கேட்டிடும்; பார்த்திடும்!
ஆயினும் அதன் மனம் கல்லாம்!

'எழுதினால் பேசினால்
சிறையிடு வோம்' - என
எந்தமிழ் அரசுகூ றிடுமோ?
எவளோ ஒருத்தி
எமை ஆள் வதனால்
எம்முடல் உணர்வுமா றிடுமா?
பழுதிலாக் கொள்கையால்
உரிமை கேட் கின்றார்!
பதடிகள் அதைத்தவ றென்பதா?
பற்பல இளைஞர்கள்
பெண்கள் சா கின்றார்;
பார்த்துக்கொண் டே,மலம் தின்பதா?

இந்தியர் என்றால்
இரும்புஅவர் உள்ளம்!
ஈழத் தமிழர்எம் இனமே!
எங்கவர் வாழினும்
எம்மவர் அன்றோ?
இவர்க்குயிர் துடிக்கும்,எம் மனமே!
வெந்துயிர் விடுபவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/147&oldid=1424640" இலிருந்து மீள்விக்கப்பட்டது