பக்கம்:கனிச்சாறு 3.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

௧௭

வல்லாளுமையினின்றும் மீளவேண்டும் என்பவையே அம்மூன்று கொள்கைகளாகும். இறுதிக்கொள்கையைக் கரணிய கருமிய முறைப்படி வலியுறுத்துவதாகுமிப் பாடல்.

30.1971-இல் தேர்தல் காலத்து எழுதப் பெற்றது. வெறுந் தேர்தல்களால் மட்டும் மக்களுக்கு எவ்வகையான பெரும்பயனும் விளைந்துவிடப் போவதில்லை என்னும் கருத்தை உணர்த்துவது.

31. கிழக்கு வங்கத்தில் ஏற்பட்ட விடுதலை எழுச்சிகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் மக்களும் அவ்வாறு தங்களை அடிமை நீக்கம் செய்துகொள்ள வேண்டும் என்னும் வேண்டுகோளோடு எழுந்தது இப்பாடல்.

32.தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு - எனும் தலைப்பில் (1972-இல் திருச்சியில் தமிழக விடுதலை மாநாட்டை நடத்தத் திட்டமிடும் நோக்கிலான செயல்பாடுகளை ஒட்டி எழுதப் பெற்ற பாடல்.

33.தென்மொழிக் கொள்கைச் செயற்பாட்டு மாநாடு - எனும் தலைப்பில் (1972-இல் திருச்சியில் தமிழக விடுதலை மாநாட்டை நடத்தத் திட்டமிடும் நோக்கிலான செயல்பாடுகளை ஒட்டி எழுதப் பெற்ற பாடல்.

34.1973-இல் தென்மொழிச் சார்பில் மதுரையில் நடத்தப் பெற்ற தமிழக விடுதலை மாநாட்டு ஊர்வல எழுச்சிச் சிறப்பைப் பாடியது.

35. பாவலரேறு ஐயா அவர்களைச் சிறப்பாசிரியராகவும், திரு. க.வெ. நெடுஞ்சேரலாதன் என்பவரை ஆசிரியராகவும் கொண்டு மதுரையிலிருந்து வெளிவந்த ‘தீச்சுடர்’ எனும் மாத இதழின் முதல் இதழில் வெளிவந்த பாடல் இது.

36. இப்பாடலும் ‘தீச்சுடர்’ இரண்டாம் இதழில் வெளிவந்தது. பெற்றோர், உற்றோர், பிள்ளைகள், மனைவியைப் பார்க்கிற எந்த வேலையையும் பிறகு செய்யலாம். விடுதலை பெறுவதே நம் முதல் வேலை என்று கற்றார். கல்லாதவர் அனைவருக்கும் அழைப்போலை கொடுக்கிறார் பாவலரேறு ஐயா அவர்கள்.

37. இப்பாடலும் ‘தீச்சுடர்’ இதழில் வெளிவந்தது. அடிமை நிலையில் உறங்கிக் கிடக்கும் தமிழனின் நிலையுணர்த்தி மொழி, இனம் விடுதலையை நாடுவாய் எனத் தமிழனை அழைக்கிறார் பாவலரேறு.

38. சென்னையில் 1975-இல் நடத்தத் திட்டமிடப்பட்ட தமிழக விடுதலை 3-ஆம் மாநாட்டினையொட்டி வெளிவந்த தென்மொழி அட்டைப் பாடல். உறங்கும் தமிழனை எழுப்பும் செய்தியைக் கொண்டது.

39. வீர மறவரின் படை நடைப் பாட்டு.

40. அரசியலாளரைக் கேட்டுப் பயனில்லை; தமிழர்கள் ஒன்றுகூடி போர்ப்பறை கொட்டி எழல் வேண்டும் என்னும் உணர்வை உணர்த்துவது.

41. தமிழக விடுதலைக் கொள்கையராய் இருக்கிறார் என்பதற்காக நெருக்கடிநிலை அடக்குமுறைக் காலத்தில் இந்திரா அம்மையாரால் கொடுநெறிச் சட்டத்தின் கீழ்ப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/18&oldid=1437703" இலிருந்து மீள்விக்கப்பட்டது