பக்கம்:கனிச்சாறு 3.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

க௯



மாமழை பொழிந்து வறட்சி நீங்கி வரலாறு மாறப்போவதாய் மகிழ்கிறார் பாவலரேறு.

49. உலகத் தமிழின முன்னேற்றக் கழகம், பெரியார் சம உரிமைக் கழகம். அறிவியக்கப் பேரவை, தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி (மார்க்கசிய, இலெனினிய). தமிழக மாநிலக்குழு (இந்தியப் பொதுவுடைமைக் கட்சி) மா.இலெ.நடுவண் சீரமைப்புக் குழு ஆகிய அமைப்புகளின் கூட்டமைப்பாய்த் ‘தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி’ 1984-ஆம் ஆண்டு - திசம்பரில் தொடங்கப்பட்ட செய்தியை அறிவிக்கும் பாடலிது. கூட்டணி வகுத்துக்கொண்ட கொள்கை எளிதே விளங்குமாறு பாடல் அமைந்துள்ளது.

50. இந்தியத் தலைமையமைச்சர் இந்திரா அம்மையாரின் இறப்பை யொட்டித் தமிழகத் தலைவர்கள் அவர்க்கு இரங்கல் தெரிவிப்பதோடு அல்லாமல் இந்திய ஒற்றுமைக்கு முந்திக்கொண்டு குரல் எழுப்பத் தொடங்கிவிட்டதைக் கருத்தில் கொண்டு இந்திய ஒற்றுமைப் பேச்சைக் கடிந்து எழுதிய பாடல் இது. ஒற்றுமை, ஒருமைப்பாடு பேசுவோரை உதவாக்கரைகள் என்றும். உலுத்தர் இனங்கள் என்றும் அழைப்பதோடு ஒற்றுமை தன்னிலும் உரிமையே பெரிதென இடித்துரைக்கிறார் பாவலரேறு.

51. தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி ஒருங்கிணைப்பால் கிடைத்த நம்பிக்கையைக் கொண்டு மக்கள் வெள்ளம் கடலெனத் திரள்க என அழைக்கும் பாடல்.

52. தாய்நிலத்தை மீட்க காலம், இடம் தேர்ந்திட்டோம், களத்திலிறங்க எண்ணிவிட்டோம். இனி வெற்றி ஓலமிட்டுத் தமிழ்நிலம் மீட்போம் என்றழைக்கிறார் பாவலரேறு.

53. தம் ஆசையும், உள் ஓசையும் தமிழினம் முன்னைப்போல் தன்னைத்தானே என்கிற நிலையில் இம் மண்ணை ஆள வேண்டும் என்பதே. என்கிறார் பாவலரேறு.

54. ‘தமிழக மக்கள் விடுதலைக் கூட்டணி’ வழிச் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்த காலச் சூழலில் எழுந்த பாடல் இது. மக்களை ஒடுக்கி, உரிமையை அடக்கி அடிமையில் முடக்கிடும் அரசே மதக்குழியில் வீழ்த்தவும் சாதியில் தாழ்த்தவுமாக இருக்கையில் கொட்டடா விடுதலை முரசு, என்று முரசு கொட்டும். இப்பாடல் விடுதலை முழக்கமிட இருக்கும் உரிமை ஒடுக்கங்களை விளக்குகிறது.

55. 1986-இல் தமிழீழத்தில் நடந்த கொடுமைகளைக்கண்டு. தமிழக மக்களை எழுச்சி கொள்ள வைக்க எழுந்த பாடல். ‘தமிழக விடுதலைக்காக எண்ணி எழுந்து பகையை வீழ்த்திடு இல்லையேல் ஒழிந்திடு’ - என்று தமிழனின் இறுதிநேரக் கடமைகளை உணர்த்துகிறார் பாவலரேறு. தமிழீழ விடுதலைப் போராளிகள் இந்திய அரசால் பிரித்தாளப் பெற்ற சூழலிலும். தமிழீழ ஆதரவினர் தமிழகத்தில் கவனிக்கப்பெற்ற சூழலிலும் எழுதப்பெற்ற பாடல் இது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/20&oldid=1437706" இலிருந்து மீள்விக்கப்பட்டது