பக்கம்:கனிச்சாறு 3.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உ௪

கனிச்சாறு மூன்றாம் தொகுதி


95. இந்திய அமைதிப்படை எனும் பெயரில் சென்ற வெறிப்படை - சிங்களக் கொடுநெறிப்படை செய்ததையே செய்கின்றதே; அதையும் இங்குச் சிலர் நயன்மைப் படுத்துகின்றனரே - அவர்கள் பெற்ற இரவல் உணவுக்கான செஞ்சோற்றுக் கடனாகவே அப்படிப் பேசுகின்றனர் - என்று இழித்துரைக்கின்றார் - பாவலரேறு.

96. இந்திய வெறிப்படை தமிழீழத்தில் செய்யும் அட்டூழியங்களைக் கண்டு அழுவதான குழந்தையிடம் யாருக்காக அழுகின்றாய்? - என்று ‘தமி(ழீழ)ழ்ச் சிட்டு’-களிடம் விளக்கம் கேட்கிறார் பாவலரேறு.

97. இந்திய வெறிப்படை விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனைப் பிடித்துவிட அலையாய் அலைந்தபோது - அவர் புகழ் போற்றி உம்மோடு நாங்கள் உயிராய்ப் பிணைந்திருக்கிறோம் - என்று அவரை வாழ்த்துகிறார் பாவலரேறு. பிரபாகரன் அவர்களைக் குறித்த முதல் தென்மொழி ஆசிரியவுரைப்பாடலும், பிரபாகரனை ‘கதிர்க்கையன்’ - என்றழைத்த முதல் பாடலும் இது.

98. இந்திய வெறிப்படையைத் தமிழீழத்திற்கு அனுப்பி தமிழர்களுக்குக் கொடுமைகள் செய்த இராசீவ் மீது பாவலரேறு அவர்கள் பாடிய அறப்பாடல் இது. இப்பாடலில் சொல்லப் பெற்ற வகையிலேயே அப்‘பூதன்’ இறக்க நேர்ந்தது வியப்பானது, இப்பாடலின் தனிச் சிறப்பை ஆசிரியரே இட்டசாவம் முட்டியது - எனும் ஆசிரியவுரையாக விரித்தெழுதியுள்ளார். இட்டசாவம் முட்டுக! எனும் பெயரில் இவை தனிநூலாக வந்திருக்கிறது.

99. நவம்பர் 27ஆம் நாள் பிரபாகரன் பிறந்தநாளையொட்டி அவரின் பெருஞ்சிறப்பையும் அவர் இத் தமிழ்ப் பேரினத்துக்குக் கிடைத்த பெறலரும் வீரன் - எனவும் சங்கையும், யாழையும், பேரிகையையும் முழங்கச் சொல்லிப் பெருமகிழ்வொடு வாழ்த்துகிறார் பாவலரேறு.

100. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழத்திற்காக உயிரீகம் செய்த மாவீரர் நாளாகக் கொண்டாடப் பெறுகின்றது. அந்நாளினை எண்ணி அவர்களின் புகழ்குறித்து வியந்தும், வாழ்த்தியும் பாடியது இது.

101. விடுதலைப்புலிகளின் தலைவர் கதிர்க்கையன் எனும் பிரபாகரனின் திறம் வியந்து தமிழர்கள் அனைவர்க்கும் அவனே தலைவன் - என்பதாய் உறுதிப்படுத்துகிறார் பாவலரேறு.

102. இராசீவ் கொலைக்குப் பின்னர் விடுதலைப் புலிகளை இழித்துரைத்து தமிழீழ விடுதலைக்கே பெருந்தடையாக அமைந்த அன்றைய செயலலிதாவையும். அவர் ஆட்சி அமைச்சர்களையும் கடுமையாகக் கண்டிக்கும் பாடல். அவர்கள் எல்லாம் வீழப்போகும் செய்தி விரைவாகக் கேட்கும் என்று வீறுரைக்கிறார் பாவலரேறு.

103. ஈழத் தமிழரை ஆதரிப்பது என்பதே நாட்டெதிர்ப்புச் செயல் என்பதாகச் சிறைசெய்யப்படுகிற சூழலில். இதோ நான் ஒருவன் ஈழத்தமிழரை ஆதரிக்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/25&oldid=1437717" இலிருந்து மீள்விக்கப்பட்டது