பக்கம்:கனிச்சாறு 3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


20  விடுதலையே வேண்டும்!

பட்டென்றும் ஒருமையென்றும் உறவாடும்
வடவனுயர் கதவை நாளும்
தட்டென்று தட்டுகின்றீர்! தரும்பொருளால்
தமிழரசை நடத்து கின்றீர்!
மட்டென்று மதித்தீரோ நந்தமிழர்
மானத்தை; மறக்கூட் டத்தை!
வெட்டொன்று துண்டிரண்டாய் “விடுதலையே
வேண்டும்”என விளம்பு வீரோ!

-1967


21  பிரிவினைக்கு வழிவகுப்போம்!

புரிவினைகள் அத்தனைக்கும் புரைவடவர்
தம்மிசைவைப் போய்ப்போய்க் கேட்டுப்
பரிவினுக்குக் காத்திருக்கும் படி,என்ன
வந்ததிங்கே! பணங்கா சுக்கே
நரிவினையைச் செய்திடுவார் நயந்துவரார்;
நறுந்தமிழர்க் குரிமை வேண்டிப்
பிரிவினைக்கு வழிவகுப்போம்; பிறவினைகள்
பிறகென்போம்! பிளிறு வோமே!

-1967
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/49&oldid=1424540" இலிருந்து மீள்விக்கப்பட்டது