இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 37
35 அடிமை நினைவுக்கு அழல் மூட்டுக!
அடிமை நினைவை அனற்கா டாக்கிட
அழலேந்துக ஒருபுறம்!
அறியாமைக்கே தீச்சுடர் காட்டி
அனல்மூட்டுக மறுபுறம்!
படிமை கொண்டான் தமிழன்; அவன்தன்
மானம் பற்றி எரிந்திட,
மண்டெரி மூட்டிச் சோம்பல் பொசுக்குக!
மருளைத் தீய்க்க ஒருபுறம்!
மிடிமை கண்டான் தமிழன்; அவனின்
மீளா வறுமையைக் கொளுத்துக!
மேட்டுக் குடியினர் போட்ட கணக்கினை
மீறும் நெருப்பில் உருட்டுக!
குடிமை பேண இளைஞர் எழுக!
கோதையர் எழுக எழுகவே!
குப்பைச் சருகாய்த் தீமைகள் அனைத்தும்
கொளுத்துக! விடுதலை மலர்கவே!
-1973