பக்கம்:கனிச்சாறு 3.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


46  கதிரவ விடுதலை ஒளிவான் படருமோ?


உலகம் முழுதும்
தமிழர் முழக்கம்!
உறக்கம் தவிர்ந்தது!
உரிமை ஒலித்தது!

கலகம் அடங்கிக்
காரிருள் கலையுமோ?
கதிரவ விடுதலை
ஒளிவான் படருமோ?

-1983


47  பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து!

மொழி,இன விடுதலை வேண்டும்! - பின்
முற்றுமாய்த் தமிழ்நாட்டு விடுதலை வேண்டும்!
வழியது வல்லாமல் தமிழர், - வேறு
வகையினில் முன்னேறும் வாய்ப்பொன்றும் இல்லை! (மொழி)

அழியாமல் இனத்தினைக் காக்கும், - மொழி
யன்றோநம் தமிழரை ஓர் அணி சேர்க்கும்!
இழியாமல் மேல்நின்று தூக்கும், - தமிழ்
ஏற்றமே மதம்,சாதி வேரினைத் தாக்கும்! (மொழி)

முதியவர் இளையவர் வருக! - இன
முனைப்பிற்கு அவரவர் உழைப்பினைத் தருக!
புதுமைக்கும் விளைவுக்கும் சொத்து! - தமிழ்,
பொருளியல் பொதுமைக்கும் புரட்சிக்கும் வித்து! (மொழி)

-1984
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/77&oldid=1424568" இலிருந்து மீள்விக்கப்பட்டது