பக்கம்:கனிச்சாறு 4.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 85


அறிவொளி விளக்கால்
அவர் விளக் கேற்று!
செறிவுரை பகர்ந்திடு!
செழிக்க அன்புசெய்!
முறிவுரை பகரேல்!
முகவுரை கீழ்மை!
வெறியுணர் வடக்கு!
வீம்பறி யாமை! 21

உரையால் உரைபெறு!
உவகையால் ஒளிசேர்!
புரைசொல் இழுக்கு!
போலிமை வினைதவிர்!
திரையிட் டிராதே!
தீமையைத் துணிந்துகொல்!
வரையறு போக்கை;
வாழ்வைக் காதல் செய்! 22

கலைபயில்; எண் பயில்;
கவினிலக் கியம்பயில்!
சிலைபயில்; வண்ணச்
சித்திரம் எழுது!
அலைபயில் கலம்பயில்!
அளாவும் விண்பயில்!
உலை பயில்; உடல் பயில்;
உன்னை நீ, பயில்! 23

விளங்கிய செல்வம்
வினைபடு கருவி!
வளங்களைப் பகிர்ந்து கொள்!
வயல்விளை வறிவு!
உளங்கொள ஈத்துண்!
உவகையே ஈகை!
களங் கல் விக்கமை!
கனவிலும் கேள்விகொள்! 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/120&oldid=1440750" இலிருந்து மீள்விக்கப்பட்டது