இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 89
58
உழைப்பே வாழ்க்கை!
உழைப்பே அறிவு!
உழைப்பே செல்வம்!
உழைப்பே நலன்கள் தேக்கும்!
உழைப்பே உறக்கம்!
உழைப்பே இன்பம்!
உழைப்பே வாழ்வைத் தூக்கும்!
உழைப்பால் உயர்க!
உழைப்பால் உண்க!
உழைக்கா துண்போன் சிறியோன்!
மழைக்கா லத்தும்
வெயிற்கா லத்தும்
மலையா துழைப்போன் பெரியோன்!
-1978