பக்கம்:கனிச்சாறு 4.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124  கனிச்சாறு – நான்காம் தொகுதி


28. மெய்யறிவு.

பிறப்பதுங் கனல்பசி பீடித் தழுவதும்
பில்குபா லொருத்தியூட் டுவதும்,
பறப்பதும் உலகினில் பற்பல துயர்நலம்
படுவதும் பல்வகை யறிவு
சிறப்பதும், சிறக்கத் துறப்பதும், துறக்கச்
சிற்றுயிர் உவப்புற உடலம்
இறப்பதும் ஈங்கிவைக் கைம்பொருள் இருப்பதும்
றையதும் அறிதல்மெய் யறிவே! 29

29. உலக இறுதி.

தனிமை மாய்தலுந் தந்நில மகல்தலும்
தரைவாழ் மக்களொன் றாகி,
குனிமை யொழிதலுங் கோன்மை தவிர்தலும்,
கொள்ளுணர் வொன்றியுள் ளொன்றி
கனிமை நிறைதலுங் கடந்துபல் லுலகுங்
கண்டுபெண் ஆணுமுட் கலந்தே
இனிமை யெய்தலும் இறையுட் காண்டலும்
இவ்வுல கிறுதியென் றுரைப்பாம்! 30

30. இறைமை.

ஒன்றே யொன்றாய் ஒளிர்ந்துள் விளர்ந்தே
ஒன்றினை ஒன்றாய் உயர்ந்தொவ்
வொன்றே யாகிய, ஒவ்வொன் றுள்ளும்
ஒன்றியுள் உதைத்திடு மொன்றாய்,
ஒன்றே ஒன்றினுள் ஒடுங்கியுள் ஒன்றி
ஒவ்வொன் றழித்து,ஒன் றாகி
ஒன்றாய் நிற்குமஃ தொன்றே ஒன்றை
ஓரிறை யென்றுள மொன்றீர்! 31

-1952
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/159&oldid=1444188" இலிருந்து மீள்விக்கப்பட்டது