பக்கம்:கனிச்சாறு 4.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 கனிச்சாறு – நான்காம் தொகுதி

நாடு திருத்து தற்கே - பல
நாட்டங்களை, மக்கள் கூட்டத்திலே சொல்லிப்
‘பாடு படுங்க’ ளென - நன்கு
பேசியரும் கைகள் வீசிச்சென்றார்! - அந்தச்
சாலையின் ஓரத்திலே! 4

உண்டி செரிப்பதற்கே - வழி
ஒன்றினை யெண்ணியே சென்றவரும், இளம்
பெண்டி ரெலா முடலைப் - பற்றிப்
பேசுவதும், எழில் வீசுவதும், புதுச்
செண்டு மலரணிந்து - குழற்
சீவி முடிந்ததை நீவிச்செல் வாரிதைக்
கண்டுளம் வெந்து நின்றேன் - அந்தக்
குருடனைச் சென்றாரில் ஒருவரும் காணோரே!
சாலையின் ஓரத்திலே! 5

கத்திப் புரண்டழுதான் - ஒரு
காசு கொடுப்பவர் யாருமில்லை; பலர்
செத்துக் கொண்டே யிருக்க - சிலர்
செல்வத்தினை, அதன் இன்பத்தினை என்றும்,
எத்தித் திருடுவதேன்? - இதை
ஏனென்று கேட்டிட, நானென்று நிற்பவர்
பத்தி லொருவ ருண்டோ? - எனப்
பார்த்திருந் தேன்;உளம் ஆர்த்துநின்றேன்!-அந்தச்
சாலையின் ஓரத்திலே! 6

-1956
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/161&oldid=1444191" இலிருந்து மீள்விக்கப்பட்டது