பக்கம்:கனிச்சாறு 4.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 137


பணிவினார் தம்மிடைப் பகைவரைப் பார்த்தேன்!
பசியிலார் ஊண்பெறக் கொதித்தேன்!
பிணியினார்க் கிரங்கிலாப் பித்தர்கண் டடுத்தேன்!
பிணியிலார் மருந்துணச் சினந்தேன்!
துணிவினார் நெஞ்சினுட் டுணுக்குகண் டிழித்தேன்!
துயரிலார்க் கிடுதல்கண் டகன்றேன்.
வணிகனார் கைவாய் வரும்படிக் கயர்ந்தேன்.
வல்லிருள் உலகுகண் டேனே! 5

-1961

 


91

அறுவடை செய்கிறார்கள்!



அறுவடை செய்கிறார்கள்! - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!

திருவடை யாமலே திண்ணையில் வீதியில்
தெருவோரச் சாய்க்கடை புழக்கடை நடுவினில்
எருவடை குழிகளில் ஈக்களாய், புழுக்களாய்
இறக்காமல் மொய்க்கின்ற ஏழ்மையைச் சொல்லியே,
அறுவடை செய்கிறார்கள் - இங்கே
அறுவடை செய்கிறார்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/172&oldid=1444208" இலிருந்து மீள்விக்கப்பட்டது