பக்கம்:கனிச்சாறு 4.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 139


92

பணப்பதுக்கல் பறிமுதல் செய்க !


அடிக்கின்ற கொள்ளையரை - பணம் பதுக்கும்
முதலைகளை அழித்தி டாமல்,
துடிக்கின்ற ஏழைகளின் துயரத்தைக்
கண்ணீரைத் துடைப்போம் என்னும்
நடிக்கின்ற நடிப்பெதற்கு? நயமான
பேச்செதற்கு? நடுக்கு எதற்கு?
பிடிக்கின்ற பிடியினிலே பணப்பதுக்கல்
பறித்தொருமை பேணு வீரே!

-1967


93

புதுமை இலக்கியம் புனைக இளைஞனே !


இலக்கியஞ் செய்க! இலக்கியஞ் செய்க!
இளைய தமிழனே! இலக்கியஞ் செய்க!
கலக்குறும் மூடக் களஞ்சியம் எல்லாம்
விலக்கியே புதுமை விளைவித் திடுக!

புராணக் குப்பைகள் தமிழில் புகுந்தன;
இராத பொய்ம்மைகள் எழுந்தன தமிழில்!
மடமைக் கதைகளால் மக்கள் இழிந்தனர்;
கடமை மறந்தனர்; கயமை மிகுந்தது!
துலக்கமற் றிருக்கும் அவர்துயர் துடைக்கும்
இலக்கியஞ் செய்க, இளைய தமிழனே! 10

‘பிரமன்’ என்பவன் பெயர்த்தெழு தியதிது;
‘அரன்’தன் மனைவிக்கு அறிவித் ததுவிது;
'நாரத’ முனிவன் நவின்றது, இந்நூல்!
‘பாரதம்’ பாடிய வியாசனின் கருத்திது!
வால்மீகி எழுதிய வடமொழிக் கதையினை
நூலாய்ப் புளுகிய கம்பனின் நூற்பிது.
- எனப்பல வாறாய் எழுந்த நூலெலாம்
மனத்தையுங் கெடுத்து அறிவையும் மாய்த்தே
ஒருசிலர் வாழவும் மிகப்பலர் வீழவும்-
நெருநலும், இன்றும் நாளையும் நின்று 20
மக்கள் குலத்தினை மட்கிடச் செய்வன!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/174&oldid=1444431" இலிருந்து மீள்விக்கப்பட்டது