பக்கம்:கனிச்சாறு 4.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194  கனிச்சாறு - நான்காம் தொகுதி


136

தம்பி ! உனக்கொரு செய்தி சொல்வேன் !


தம்பி! உனக்கொரு
செய்தி சொல்வேன் - தமிழ்த்
தாயைக் குறித்தொரு
கொள்கை சொல்வேன்!
வெம்பி வதங்கியே
வாடுகின்றாள்! -அவள்
வீரரை எங்கணும்
தேடுகின்றாள்!  (1)

தனக்கென ஆட்சித்
தகுதியில்லை -அவன்
தாளைப் பிடித்தார்க்கும்
மீட்சியில்லை!
மினுக்கும் கவர்ச்சியும்
மிக்குடைய பல
மிடுக்கு மொழிகளால்
சாம்புகின்றாள்!  (2)

இந்திக்கும் ஆங்கில
மொழியினுக்கும் -தமிழ்
இளைஞர் தருகின்ற
மதிப்பினைப்போல்
சிந்திக்கும் ஆற்றலைத்
தாம் மிகுக்கும் -நம்மின்
செந்தமிழ்த் தாய்க்குத்
தருவதில்லை!  (3)

இந்த நினைவினால்
வாடுகின்றாள்! -உளம்
ஏங்கியே நம்துணை
நாடுகின்றாள்!
வந்துநம் அணியினில்
சேர்ந்துகொள்வீர் -தமிழ்
வாழ்கவே வாழ்கென
ஆர்ந்து செல்வீர்!  (4)

-1990
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/229&oldid=1444546" இலிருந்து மீள்விக்கப்பட்டது