பக்கம்:கனிச்சாறு 4.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  203


147

கவர்ச்சிக் கலைகளால் நாடு வீழ்ந்திடும் !


கவர்ச்சிக் கலைகளில்
மனம் மொய்த்துக் கிடக்கும்
கணக்கிலா இளைஞரைப்
பார்க்கிறோம்! - உளம்
வேர்க்கிறோம்! - வெறும்
சுவர்ச்சித் திரங்களை
அடித்தடித் தொட்டுவார்
சுரண்டல் திரைப்படக்
காரர்கள் -கொலை -காரர்கள்!

பள்ளிக் குழந்தைகள்,
கல்லூரி இளைஞர்கள்,
பாவையர், முதுமையர்
எவருமே - நெறி
தவறவே - பகற்
கொள்ளை யடி த்திடும்
கூட்டமே திரைப்படக்
கொலைஞர்கள், கலைஞர்கள்
என்பவர்- மூளை தின்பவர்!


இளைஞர்கள் இ ளைஞைகள்
இல்லற மகளிரும்
எச்சரிக் கையுடன்
இருக்கவும் அரசை
நெருக்கவும்! - நல்ல
விளைவுகள் இலாவிடில்
வீழ்ந்திடும் பண்புகள்;
வீழ்ந்திடும் பெருமைகள்!
வீழ்ந்திடும் நாடும் ஆழவே!

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/238&oldid=1444561" இலிருந்து மீள்விக்கப்பட்டது