பக்கம்:கனிச்சாறு 4.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  207


151

எண்ணிப் பார்க்க வேண்டும் ! - தம்பி
எதற்கும் துணிய வேண்டும் !


எண்ணிப் பார்க்க வேண்டும்! - தம்பி
எதற்கும் துணிய வேண்டும்!
பன்னிப் பன்னிச் சொல்லும் - கருத்தின்
பயனை உணர வேண்டும்! - அதனைப்
பரப்பும் முயற்சி வேண்டும்!

மொழியைப் பேண வேண்டும் - நம்தாய்
மொழியைப் போற்ற வேண்டும்!
வழியைத் தேர வேண்டும் தமிழை
வாழ வைக்க வேண்டும்! - அதனின்
வளத்தைப் பெருக்க வேண்டும்!

இழிவைப் போக்க வேண்டும் தமிழர்க்(கு)
ஏற்றம் விளைக்க வேண்டும்!
அழிவைத் தடுக்க வேண்டும்! - தமிழர்
அரசை நிறுவ வேண்டும் - தமிழ்
ஆட்சி அமைக்க வேண்டும்!

பொருளைப் பெருக்க வேண்டும் - இங்கு
பொதுமை மலர்த்த வேண்டும்!
இருளை விரட்ட வேண்டும் அதனை
எண்ணிச் செய்தல் வேண்டும் - மக்கள்
எவர்க்கும் வாழ்க்கை வேண்டும்!

-1994
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/242&oldid=1444565" இலிருந்து மீள்விக்கப்பட்டது