பக்கம்:கனிச்சாறு 4.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

  222 ☐ கனிச்சாறு - நான்காம் தொகுதி


162

ஓங்கிப் பெருகுக உ.த.மு.க.!


உலகத் தமிழின முன்
னேற்றக் கழகம்
இலகத் தரைநெடுகல்
எங்கும் - அலகற்(று)

ஓங்கு கிளைபல்கி
ஒன்றுபல நூறாகித்
தேங்கு நலம்பெருகத்
தேர்ந்து!

-1982
 

163

உ.த.மு.க. உண்மைக் கழகம்!


உலகத் தமிழின முன்னேற்றக் கழகம்
உண்மைக் கழகம் பாருங்கள்! -இதில்
உறுப்பினராகச் சேருங்கள்! - அதற்கு
உங்கள் துணையைத் தாருங்கள்! - அதன்
உழைப்பை எவர்க்கும் கூறுங்கள்!
கூறுங்கள்! கூறுங்கள்!

நிலவும் சாதி மதங்களை எல்லாம்
நில்லா தறவே தொலைப்பது! - அது
நின்று விளங்கும் செந்தமிழ் - மொழியை
நிலத்தில் எங்கும் விளைப்பது! - அது
நேர்மைத் தொண்டில் தழைப்பது!
தழைப்பது! தழைப்பது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/257&oldid=1444646" இலிருந்து மீள்விக்கப்பட்டது