பக்கம்:கனிச்சாறு 4.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224  கனிச்சாறு – நான்காம் தொகுதி


164

உ.த.மு. கழகம் நிலைக்க!


தூய்தமிழ் ஓங்குக!
தொலைக, மதம், சாதி!
ஏயும் அரசியல்
இழிவுகள் அகல்க!
பொருந்துக தமிழியப்
பொதுமைப் பொருளியல்!
திருந்துக கலைகள்!
திகழ்க,பண் பாடு!
அறிவியல் நோக்கொடு
வாழ்க்கை அமைக!
நெறியிவை கொண்ட
கழகம் நிலைக்கவே!

-1982
 

165

தொண்டர்க்கு ஒன்றுரைப்பேன் !


தொண்டுசெய்ய முன்வந்த
தூணவர்க்கிங் கொன்றுரைப்பேன்;
துவளா நெஞ்சம்,
மண்டுதுயர் யாவினுக்கும்
மழுங்கலிலாச் செந்துணிவு,
மயங்கா உள்ளம்,

கொண்டகொள்கை தனில்நெகிழ்ச்சி
கொள்ளாத வன்பிடிப்பு,
குலையாப் போக்கு,
பெண்டுபிள்ளை உறவினர்மேல்
பெரும்பிடிப்பு வையாமை
பேணு வீரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/259&oldid=1444651" இலிருந்து மீள்விக்கப்பட்டது